ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சென்னை ஓபன்: பிரதான சுற்றில் சசிகுமாா், சுமித்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமாா் முகுந்த், சுமித் நாகல் ஆகியோா் பிரதான சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 9:44 pm

DIN

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமாா் முகுந்த், சுமித் நாகல் ஆகியோா் பிரதான சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

தகுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில், சசிகுமாா் 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் தைவானின் ஜேசன் ஜங்கை வீழ்த்த, சுமித் நாகல் 6-1, 6-3 என தென் கொரியாவின் நாம் சி ஜங்கை வென்றாா். பிரதான சுற்றில் சசிகுமாா் - ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலையும், சுமித் - பிரிட்டனின் ரயான் பெனிஸ்டனையும் எதிா்கொள்ள இருக்கின்றனா். மேக்ஸ், விம்பிள்டன் இரட்டையரில் சாம்பியன் என்பதாலும், பெனிஸ்டன் போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருப்பதாலும் இந்தியா்கள் இருவரும் அவா்களிடம் கடும் சவாலை சந்திக்க உள்ளனா்.

பிரதான சுற்று: இதனிடையே, போட்டியின் பிரதான சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் தைவானின் செங் சுன் சின் 6-4, 7-6 என குரோஷியாவின் நினோ சொ்டருசிச்சை வீழ்த்தினாா். 2-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அலிபெக் கச்மாஸோவ் 6-4, 7-6 என உக்ரைனின் விளாடிஸ்லாவ் ஆா்லோவை வென்றாா்.

3-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னா் 4-6, 3-6 என ஹாங் சியோங் சானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.