இந்திய அணி 3-வது டெஸ்டை வென்றால் ஆமதாபாத் டெஸ்டில் வீரர்கள் தேர்வில் மாற்றம் ஏற்படும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
3-வது டெஸ்டை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்து விட்டால் 4-வது டெஸ்டில் அணியில் மாற்றம் செய்து இறுதிச்சுற்றுக்கான பயிற்சியாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என ரோஹித் சர்மா இன்று தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தயாராவது பற்றி ஏற்கெனவே நாங்கள் பேசியுள்ளோம். அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கியமான ஒரு வீரர், ஷர்துல் தாக்குர். எங்களுடைய திட்டங்களில் அவர் உள்ளார். அவருக்குத் தற்போதுதான் திருமணமாகியுள்ளது. எனவே 4-வது டெஸ்டுக்கு எந்தளவுக்குத் தயாராக உள்ளார் எனத் தெரியவில்லை. சமீபத்தில் அவர் எத்தனை ஓவர்கள் வீசினார் எனத் தெரியாது. ஆனால் அதற்கான திட்டங்களில் நாங்கள் உள்ளோம். எங்களுக்கான முடிவு இந்தூர் டெஸ்டில் கிடைத்துவிட்டால் ஆமதாபாத் டெஸ்டில் புதிதாக முயற்சி செய்வோம். இங்கிலாந்து ஆடுகளம் இரு அணிகளுக்கும் வித்தியாசமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி நான் பேச விரும்பவில்லை. இன்னும் நாங்கள் தகுதியடையவில்லை. இந்தூர் டெஸ்டை வென்ற பிறகு அதைப் பற்றி பேசலாம். அதுதான் சரியானதாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடுப்பாட்டம்: முதலிடத்தில் நீடிக்கும் பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி!
ஜூலை 28 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவா
உலகின் 18% ஆண்ட்ராய்ட் கேம் பதிவிறக்கம் இந்தியாவில் செய்யப்படுகிறது!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



