3-வது டி20 ஆட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களின் உத்தியை மாற்றினார் என ராகுல் திரிபாதிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் இந்திய அணி கேப்டன் பாண்டியா.
சூர்யகுமாா் யாதவின் அதிரடி சதத்தால், இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா 228/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்களும் ஷுப்மன் கில் 46 ரன்களும் திரிபாதி 35 ரன்களும் எடுத்தார்கள்.
இந்திய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார் திரிபாதி. இந்நிலையில் அவருடைய ஆட்டம் பற்றி இந்திய அணியின் கேப்டன் பாண்டியா கூறியதாவது:
சூர்யகுமார் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ராகுல் திரிபாதிக்கும் சிறப்புமிக்க பாராட்டுகள். அவர் காண்பித்த வேகம், அது அவருக்கு மிக இயல்பானது, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியது. ஆரம்ப ஓவர்களில் பந்து ஏதோ செய்வது போல அடுத்து விளையாட இருந்த பேட்டர்களுக்குத் தோன்றியது. ஆனால் திரிபாதி சுறுசுறுப்பாக விளையாடி, ரன்கள் எடுத்ததால் பந்துவீச்சாளர்கள் நீளத்தை மாற்றிக் கொண்டார்கள். பந்து நகர்வது திடீரென நின்று போனது. அதற்குப் பிறகு இலங்கை அணி எங்களை விரட்டுவது போல மாறிப் போனது இந்த ஆட்டம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



