சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா (படங்கள்)
By DIN | Published On : 24th January 2023 11:49 AM | Last Updated : 24th January 2023 11:49 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா பங்கேற்றுள்ளார்.
காயம் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணி தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடவுள்ள ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாட முடிவெடுத்தார் ஜடேஜா. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும் ஜடேஜா விளையாடவில்லை.
தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார்.
இந்த ஆட்டத்துக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுத்த படங்கள்: