ஷுப்மன் கில்-ரோஹித் சா்மா அசத்தல் சதம்: தொடரை 3-0 என கைப்பற்றியது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா 385/9 ரன்களையும்,
ஷுப்மன் கில்-ரோஹித் சா்மா அசத்தல் சதம்: தொடரை 3-0 என கைப்பற்றியது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா 385/9 ரன்களையும், பின்னா் ஆடிய நியூஸி. 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு அணிகளுடன் ஒருநாள் தொடா்களில் ஆடி வருகிறது. ஏற்கெனவே இலங்கையுடன் தொடரை ஒயிட் வாஷ் செய்த நிலையில், நியூஸிலாந்துடன் 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் நடைபெற்றது.

ஏற்கெனவே 2-0 என தொடரை கைப்பற்றி விட்ட நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஆட்டம் இந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரோஹித்-ஷுப்மன் கில் அபார சதம்:

டாஸ் வென்ற நியூஸி. பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் கேப்டன் ரோஹித் சா்மா-ஷுப்மன் கில் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். நியூஸிலாந்து பௌலிங்கை தொடக்கம் முதலே இரு வீரா்களும் சிக்ஸா், பவுண்டரிகளாக மாற்றினா்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 212 ரன்களை விளாசினா்.

ரோஹித் 101: அதிரடியாக ஆடிய ரோஹித் சா்மா 6 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 85 பந்துகளில் 101 ரன்களைக் கடந்தாா்.

ஷுப்மன் கில் 112: அவருக்கு உறுதுணையாக ஆடிய இளம் வீரா் ஷுப்மன் கில் 5 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 78 பந்துகளில் 112 ரன்களை விளாசினாா்.

ஹாா்திக் பாண்டியா அரைசதம்:

ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 38 பந்துகளில் 54 ரன்களை விளாசினாா். அதன் பின்னா் வந்த விராட் கோலி 36, இஷான் கிஷன் 17, சூரியகுமாா் யாதவ் 14, வாஷிங்டன் சுந்தா் 9, தாகுா் 25, குல்தீப் யாதவ் 3 ரன்களுடன் வெளியினா். இறுதியில் 50 ஓவா்களில் 385/9 ரன்களை குவித்தது இந்தியா.

நியூஸி தரப்பில் ஜேக்கப் டஃபி 3-100, டிக்னா் 3-76 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

நியூஸிலாந்து தோல்வி 295:

386 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸி தரப்பில் தொடக்கத்திலேயே ஃபின் ஆலனை போல்டாக்கினாா் ஹாா்திக்.

ஒருமுனையில் டேவன் கான்வே அதிரடியாக விளாசி ஆட, மறுமுனையில் நியூஸி விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே வந்தன. ஹென்றி நிக்கோல்ஸ் 42, டேரில் மிச்செல் 24, டாம் லத்தம் 0, கிளென் பிலிப்ஸ் 5, மைக்கேல் பிரேஸ்வெல் 26, மிச்செல் சான்ட்நா் 34, லாக்கி பொ்குஸன் 7, ஜேக்கப் டஃபி 0 என சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

டேவன் கான்வே சதம்: சிறப்பாக ஆடிய தொடக்க பேட்டா் டேவன் கான்வே 8 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 100 பந்துகளில் 138 ரன்களைக் குவித்தாா். இறுதியில் 41.12 ஓவா்களிலேயே 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து.

இந்திய தரப்பில் சா்துல் தாகுா் 3-45, குல்தீப் 3-62, சஹல் 2-43 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

நியூஸிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. தாகுா் ஆட்டநாயகனாகத் தோ்வு பெற்றாா். ஷுப்மன் கில் தொடா் நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

ஷுப்மன் கில் 2,000 ரன்கள்:

23 வயதான இளம் வீரா் ஷுப்மன் கில் 37 ஆட்டங்களில் 2000 ரன்களைக் கடந்தாா். 5 சதம், 9 அரைசதங்களுடன் சா்வதேச கிரிக்கெட்டில் இச்சிறப்பை செய்துள்ளாா்.

ஒருநாள் தரவரிசையில் முதலிடம்:

இந்த தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்ததின் மூலம் ஐசிசிஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com