ஒரு ஓவருக்கு எத்தனை பவுன்ஸர்கள் வீசுவது? இங்கிலாந்தை விமர்சித்த முன்னாள் வீரர்!

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பவுன்ஸர் பந்துகளில் மட்டுமே விக்கெட்டுகளை எடுத்தது பேசுபொருளாகியுள்ளது. 
ஒரு ஓவருக்கு எத்தனை பவுன்ஸர்கள் வீசுவது? இங்கிலாந்தை விமர்சித்த முன்னாள் வீரர்!


லண்டனில் நடைபெறும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

4வது நாள் முடிவில் இங்கிலாந்து 114/4 ரன்கள் எடுத்தது. இதில் பவுன்ஸர் பந்துகளுக்குதான் அதிக விக்கெட்டுகள் கிடைத்தது.

குறிப்பாக இங்கிலாந்து அணி இந்த உத்தியை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. கவாஜா, ஸ்மித், ஹெட், கிரீன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், லயன் என பவுன்சர் பந்துகளில் மட்டுமே விக்கெட்டுகள் விழுந்தது. இந்த ஆட்டம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். 

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டைலர், “பேட்ஸ்மேன் ஷாட் விளையாடாவிட்டால் ஒரு ஓவருக்கு எத்தனை பவுன்சர்கள் போட வேண்டும்? இந்த யுக்தியை இரண்டு அணிகளும் பயன்படுத்தினல வெற்றி கிடைக்கும். 90களுக்கு முன்பு ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே அனுமதி, பின்னர் 90களுக்கு மத்தியில் ஒரு ஓவருக்கு 2 என்றானது. பழைய அச்சுறுத்தும் விதி அப்படியேதான் உள்ளது. இதை நடுவர் உணர்ந்தால் நோ பால் கொடுக்கலாம். தோள்பட்டைக்கு மேல் இல்லாமல் இருந்தாலும் ஒரே லென்தில் பந்து வீசுவது அச்சுறுத்துவதுதான். இது நடுவருக்கு சவாலானது. நானாக இருந்தால் நோ பால் தருவேன். 70களில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருமணி நேரம் பவுன்சர்களாக வீசினார்கள். பிறகுதான் விதிகள் மாற்றப்பட்டது” எனக் கூறினார். 

இதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், “இது அச்சுறுத்துவது அல்ல, விக்கெட்டுகளை எடுப்பது” என மறுப்பு கூறினார். இது சமூக வலைதளங்கலில் பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com