
கடைசி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆஸி. அணி 295 ரன்களுக்கு ஆட்டமிழக்க இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டினை விளையாடி 395 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸி. அணிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். பெயர்ஸ்டோ 78 ரன்களும் ஜாக் க்ராவ்லி 73 ரன்களும் டக்கெட், ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஆஸி. அணி சார்பில் ஸ்டார்க், டாட் மர்ஃபி தலா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
இதையும் படிக்க: ஓய்வு பெற விரும்பவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்
இன்று மற்றும் நாளை என இரண்டு நாளில் ஆஸி. அணி 384 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம். இங்கிலாந்து அணி ஆஸி. அணியை 383 ரன்களுக்குள்ளாக ஆல் அவுட் செய்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் இந்த இரண்டும் நடக்கவில்லையெனில் ஆட்டம் டிராவில் முடிவடையும்.
இந்த ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 2-1 என ஆஸி. அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸி. அணி 8 ஓவர் முடிவில் 31 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர்-11* , கவாஜா -18* ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.