நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
Updated on
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்.15) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.  

இந்திய அணி தான் ஆடிய 9 லீக் ஆட்டங்களிலும் வென்று முதலிடத்துடன் தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் நியூஸிலாந்து முதலிடத்தில் இருந்த நிலையில், தொடா்ச்சியாக தோல்வி கண்டு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னா் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், பலம் பொருந்திய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் 117 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்தியா 59 வெற்றியையும் நியூஸி. 50 வெற்றியை பதிவு செய்துள்ளன. ஒரு ஆட்டம் டையாகவும், 7 ஆட்டங்கள் முடிவில்லாமலும் ஆயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com