புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி வென்றார் செளரவ் கோஷல்!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

News image
Updated On :5 அக்டோபர் 2023, 2:04 pm

DIN


ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

12 ஆவது நாளான இன்று, ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் செளரவ் கோஷல், 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார். இதனால், அவர் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

முன்னதாக ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சிங் இணை தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.