உலகக் கோப்பை: அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்திய இளம், மூத்த வீரர்கள்!
உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது அறிமுகப் போட்டியிலேயே இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.


உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது அறிமுகப் போட்டியிலேயே இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது உலகக் கோப்பை முதல் போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.
உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது அறிமுகப் போட்டியில் சதமடித்த இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்களின் விவரங்களை பின்வருமாறு காணலாம்.
அறிமுகப் போட்டியில் சதமடித்த இளம் வீரர்கள்
விராட் கோலி (இந்தியா) - வங்கதேசத்துக்கு எதிராக, 2011 - 22 வயது, 106 நாள்கள்
ஆண்டி ஃபிளவர் (ஜிம்பாப்வே) - இலங்கைக்கு எதிராக, 1992 - 23 வயது, 301 நாள்கள்
ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - இங்கிலாந்துக்கு எதிராக, 2023 - 23 வயது, 321 நாள்கள்
நாதன் ஆஸ்ட்லே (நியூசிலாந்து) - இங்கிலாந்துக்கு எதிராக, 1996 - 24 வயது, 152 நாள்கள்
டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) - ஜிம்பாப்வேக்கு எதிராக, 2015 - 25 வயது, 250 நாள்கள்
அறிமுகப் போட்டியில் சதமடித்த மூத்த வீரர்கள்
ஜெரெமி பிரே (அயர்லாந்து) - ஜிம்பாப்வேக்கு எதிராக, 2007 - 33 வயது, 105 நாள்கள்
டெவான் கான்வே (நியூசிலாந்து) - இங்கிலாந்துக்கு எதிராக, 2023 - 32 வயது, 89 நாள்கள்
டெனிஸ் அமிஸ் (இங்கிலாந்து) - இந்தியாவுக்கு எதிராக, 1975 - 32 வயது, 61 நாள்கள்
கிரைக் விஷார்ட் (ஜிம்பாப்வே) - நமீபியாவுக்கு எதிராக, 2003 - 29 வயது, 32 நாள்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...