இனிவரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு இறுதிப்போட்டியே: ஆஸ்திரேலிய கேப்டன்!

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இனிவரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு இறுதிப்போட்டியே: ஆஸ்திரேலிய கேப்டன்!

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில்  தோல்வியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. அதன் இரண்டாவது போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தொடர்ச்சியான இந்த இரண்டு தோல்விகளால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டில் லீக் போட்டிகளில் இந்தியாவிடமும், தென்னாப்பிரிக்காவிடமும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. கடந்த ஆண்டும் எங்களுக்கு இந்த இரண்டு அணிகளே சவாலாக இருந்தது. நாங்கள் சிறிது காலம் விளையாடமல் இருந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அணிகளுக்கு எதிராக நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அதனால், நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். உலகக் கோப்பையில் எங்களது தொடக்கம் சிறப்பானதாக இல்லை. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அணியில் உள்ள அனைவரும் உறுதியாக இருக்கிறோம். இனிவரும் ஒவ்வொரு போட்டியும் கிட்டத்தட்ட இறுதிப்போட்டி போன்றது. நாங்கள் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

லக்னௌவில் நாளை (அக்டோபர் 16) நடைபெறும் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com