அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி: டேரில் மிட்செல்

அழுத்தமான சூழலில் விராட் கோலியின் சிறந்த பேட்டிங் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாக நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
அழுத்தமான சூழலில்  சிறப்பாக விளையாடிய விராட் கோலி: டேரில் மிட்செல்
Published on
Updated on
1 min read

அழுத்தமான சூழலில் விராட் கோலியின் சிறந்த பேட்டிங் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாக நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 95 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. 

இந்த நிலையில், அழுத்தமான சூழலில் விராட் கோலியின் சிறந்த பேட்டிங் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாக நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி உலகத் தரத்திலான வீரர். அழுத்தமான சூழலில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். அவர் சதம் அடிக்காவிட்டாலும் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துவிட்டார். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் விக்கெட்டை கைப்பற்ற பல உத்திகளைக் கையாண்டோம். எங்களது பந்துவீச்சை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.