தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Published On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று  இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய அணிக்கான சவால் நிறைந்த போட்டி இன்னும் வரவில்லை என்று நான் கூறுவேன். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டி சிறிது சவாலனதாக இருந்தது. ஆனால், இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எப்போதும் கடினம். சொந்த மண்ணில் அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.

இந்திய அணி சமபலம் மிக்கதாக உள்ளது. தற்போது இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இல்லாதது அந்த அணிக்கு சிறிது பின்னடைவாகும். இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினால் அப்போது பேட்டிங்குக்கு ஆல்ரவுண்டர்  ஹார்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். ஆனால், அவர் அணியில் தற்போது இல்லாதது அணிக்கு சில நேரங்களில் ஆபத்தாக அமையலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.