ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஜிம்பாப்வேவின் மோசமான சாதனையை முறியடித்த இலங்கை அணி!

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2023, 10:59 am

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், புணேவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆப்கானிஸ்தான் அணியும் திங்கள்கிழமை மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த தொடரில் விளையாடி 6 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 43 முறை தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியின்(42 தோல்விகள்) சாதனையை முறியடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி 37 தோல்விகளுடன் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.