தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
By DIN | Published On : 03rd September 2023 04:00 PM | Last Updated : 03rd September 2023 04:16 PM | அ+அ அ- |

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 350 ஒருநாள் போட்டிகளில் 10,773 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 சதங்கள், 73 அரை சதங்கள் அடங்கும்.
நேற்றைய ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியினர் 48.5 ஓவர்களுக்கு 266 ரன்கள் எடுத்தது. மழையினால் ஆட்டம் தொடராமல் கைவிடப்படது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: சென்னை 28 படத்தினைப் போல ஆட்டமிழந்த ரோஹித்: முன்னாள் வீரர் பகிர்ந்த புகைப்படம்!
இதில் இஷான் கிஷன் -ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்தி கொடுத்தனர். இஷான் கிஷன் 82 ரன்களும் பாண்டியா 87 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: முன்னாள் ஜிம்பாப்வே வீரர் காலமானார்!
இந்த அரைசதத்தின் மூலம் இஷான் கிஷன் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார். இதற்கு முன்பாக தோனி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது தோனிக்குப் பிறகு 2வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இந்த சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகர் விஜய்யால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான ஹாலிவுட் நடிகர்!
18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் 776 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதம், 7 அரைசதங்கள் அடங்கும். கே.எல். ராகுல் அணியில் இடம்பெற்ற பிறகு இஷான் கிஷன் அணியில் நீடிப்பாரா என் சந்தேகம் எழுந்துள்ளது.
நேபாளத்துடனான போட்டியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...