34 வயதாகும் விராட் கோலி 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,900க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். இதில் 46 சதங்கள், 66 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
சச்சினுக்குப் பிறகு அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி இருக்கிறார். எப்போதும் இளம் வீரர்களுடன் உரையாடல் நிகழ்த்துவதில் ஆர்வமுடையவர்.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் அரைசதமடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 112முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங் சாதனை சமன்செய்துள்ளார் விராட் கோலி. சச்சின் 145 முறை 50+ ரன்களை எடுத்து உலக அளவில் மிதலிடத்தில் இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் அதிகம் முறை 50+ அடித்தவர்கள்:
சச்சின் டெண்டுல்கர்- 145
குமார் சங்ககாரா- 118
விராட் கோலி- 112
ரிக்கி பாண்டிங்- 112
ஜாக் காலிஸ்- 103
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






