மேக்கேதாட்டு தனித்தீர்மானத்தை தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் குழுவாகச் சென்று மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
Leader of the Opposition Udhayanidhi Stalin has urged that a delegation of Tamil Nadu MPs and MLAs should go in person to submit the separate resolution on Mekedatu to the Central Government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாடு பாலைவனமாகும்: இபிஎஸ்

மேக்கேதாட்டு அணை: கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உதவும் - டி.கே. சிவகுமார்

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி...
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




