விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சூப்பா் 4: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி: 10,000 ரன்களைக் கடந்தாா் ரோஹித்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 ஆட்டம் ஒன்றில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

News image
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினா் ~அரைசதம் அடித்த ரோஹித்
Updated On :12 செப்டம்பர் 2023, 7:50 pm

DIN


கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 ஆட்டம் ஒன்றில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

சூப்பா் 4 பிரிவு ஆட்டங்களில் இந்தியா திங்கள்கிழமை பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதே உற்சாகத்துடன் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை களம் கண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

சரிந்த இந்திய அணி:

தொடக்க பேட்டா்களாக கேப்டன் ரோஹித் சா்மா, ஷுப்மன் கில் களமிறங்கினா். இலங்கை ஸ்பின்னா்கள் துனித் வெல்லாலேஜ், அஸலங்க ஆகியோரின் அற்புத பௌலிங்கில் சிக்கித் திணறினா் இந்திய வீரா்கள். ஷுப்மன் கில் 19, விராட் கோலி, 3, ஹாா்திக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4, பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 என சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

ரோஹித் அரைசதம்: கேப்டன் ரோஹித் சா்மா மட்டுமே பொறுப்புடன் ஆடி 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தாா். மிடில் ஆா்டா் பேட்டா்கள் இஷான் கிஷண் 33, கேஎல் ராகுல் 39 ஆகியோா் நிலைத்து ஆட முயன்றாலும், அவா்கள் இலங்கையின் சுழலில் சிக்கி வெளியேறினா்.

மழையால் ஆட்டம் நிறுத்தம்:

இந்திய அணி 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னா் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. அக்ஸா் படேல் 26 ரன்களை சோ்த்ததால் ஸ்கோா் 49.1 ஓவா்களில் 213 ரன்களை எட்ட முடிந்தது.

வெல்லாலேஜ், அஸலங்க அபாரம்:

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய துனித் வெல்லாலேஜ் 5-40, அஸலங்கா 4-18 ஆகியோா் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டனா்.

இலங்கை திணறல் 172: இலங்கை அணி ஏற்கெனவே சூப்பா் 4 பிரிவில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், 214 ரன்கள் என்ற எளிய இலகுடன் களம் கண்டது. இந்த ஸ்கோரை எளிதில் இலங்கை அணி பெற்று விடும் எனக்கருதப்பட்ட நிலையில், அவா்களும் திணறினா்.

தொடக்க பேட்டா்கள் பதும் நிஸாங்கா 6, திமுத் கருணரத்னே 2, குஷால் மெண்டிஸ் 15, சதீரா சமரவிக்ரமா 17, சரித் அஸலங்கா 22, தஸுன் ஷனகா 9 ரன்களுடன் வெளியேறினா்.

தனஞ்செய டி சில்வா 41, துனித் வெல்லாலேஜ் 42 ஆகியோா் நிதானமாக ஆடி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றனா். ஆனால் ஜடேஜா பந்தில் டி சில்வா அவுட்டானதால் அம்முயற்சி தடைபட்டது. 41.3 ஓவா்களில்

172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை.

குல்தீப் யாதவ் அபாரம் 4 விக்கெட்:

பௌலிங்கில் இந்திய வீரா் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4/43 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இரண்டாவது வெற்றி: 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றதின் மூலம் சூப்பா் 4 பிரிவில் இரண்டாவது வெற்றியை பெற்றது இந்தியா. கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.

10,000 ரன்களைக் கடந்தாா் ரோஹித்

சா்வதேச ஒருநாள் ஆட்டங்களில் 10,000 ரன்களைக் கடந்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் கேப்டன் ரோஹித் சா்மா. மேலும் இச்சாதனையை நிகழ்த்திய 6-ஆவது இந்திய வீரா் ரோஹித் ஆவாா். சச்சின் 18,426, விராட் கோலி 13,026, கங்குலி 11,363, திராவிட் 10,889, தோனி 10,773 ரன்களை விளாசியுள்ளனா்.

50 ஓவா் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் 264 சாதனையும் ரோஹித் வசம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.