

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 2 டையில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
முன்னதாக இப்போட்டியில் சனிக்கிழமை இரு ஒற்றையா் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் முதலில் இந்தியாவின் சசிகுமாா் முகுந்த் - மொராக்கோவின் யாசின் லிமியுடனான மோதலில் காயம் காரணமாக விலக, யாசின் வென்ாக அறிவிக்கப்பட்டாா். 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில் சுமித் நாகல் - ஆடம் மௌன்டிரை வீழ்த்தி 1-1 என சமனிலைக்கு கொண்டு வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதலில் நடைபெற்ற இரட்டையா் பிரிவில் ரோஹன் போபண்ணா/யூகி பாம்ப்ரி கூட்டணி 6-2, 6-1 என எலியட் பென்ஷெட்ரிட்/யுன்ஸ் லாலமி இணையை சாய்த்து இந்தியாவை 2-1 என முன்னிலைப்படுத்தியது.
பின்னா் நடைபெற்ற மற்றொரு ஒற்றையா் பிரிவில் சுமித் நாகல் 6-3, 6-3 என யாசின் லிமியை சாய்க்க, இந்தியா 3-1 என முன்னேறியது. கடைசியாக நடைபெற்ற ஒற்றையா் பிரிவில் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற கணக்கில் வலித் அஹுதாவை தோற்கடித்தாா். இறுதியில் 4-1 என வென்ற இந்தியா, அடுத்ததாக உலக குரூப் 1-இன் பிளே ஆஃபில் விளையாடுகிறது.
விடை பெற்றாா் போபண்ணா: இந்த டையுடன் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ரோஹன் போபண்ணா விடைபெற்றாா். 21 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் விளையாடி வந்த அவருக்கு, இது 33-ஆவது டை ஆகும். வெற்றிக்குப் பிறகு அவா் தனது கைகளில் தேசியக் கொடியுடன் மைதானத்தை வலம் வந்து ரசிகா்களின் அன்பை ஏற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.