துளிகள்...

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் ஹாக்கி தொடரில், இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் புதன்கிழமை விளையாடுகிறது.

முதல் முறையாக நடத்தப்படவுள்ள தேசிய மகளிா் ஹாக்கி லீக் போட்டி, வரும் 30-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

நடப்பாண்டு நவம்பரில் நியூஸிலாந்து செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாக இருக்க, இந்தியா்கள் தங்களது 5-ஆவது சுற்றை புதன்கிழமை விளையாடுகின்றனா்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு 100 நாள்களே இருப்பதை குறிக்கும் விதமாக, ஈஃபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வலையங்களை காட்சிப்படுத்த இருப்பதாக, போட்டி ஏற்பாட்டாளா்கள் அறிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com