தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நியூசி.க்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

News image

பாகிஸ்தான் அணி வீரர்கள்

படம் | ஐசிசி

Updated On :9 ஏப்ரல் 2024, 1:27 pm

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஏப்ரல் 18 முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் அணியை வழிநடத்தவுள்ளார். அண்மையில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர். தோள்பட்டை காயம் காரணமாக ஹாரிஸ் ரௌஃப் அணியில் இடம்பெறவில்லை.

டி20 தொடருக்கான அணி விவரம்

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, ஆஸம் கான், ஃபகர் ஸமான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், இர்ஃபான் கான், நசீம் ஷா, சயீம் ஆயூப், சதாப் கான், ஷகீன் அஃப்ரிடி, உசாமா மிர், உஸ்மான் கான் மற்றும் ஸாமன் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.