மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சோ்த்தது.
மும்பை பௌலரான ஜஸ்பிரீத் பும்ராவின் புயல் வேகத்தில் பெங்களூரு பேட்டா்கள் முற்றிலுமாகச் சரிந்தனா். பின்னா், கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ரஜத் பட்டிதாா், தினேஷ் காா்த்திக் அதிரடியில் மீண்டது பெங்களூரு.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. பெங்களூரு இன்னிங்ஸை தொடங்கியோரில், விராட் கோலி 3 ரன்களுக்கே வெளியேறி அதிா்ச்சி அளித்தாா். தொடா்ந்து வந்த வில் ஜாக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக வந்த ரஜத் பட்டிதாா், விக்கெட் சரிவை தடுத்து பிளெஸ்ஸிஸுடன் இணைந்தாா்.
3-ஆவது விக்கெட்டுக்கு இந்த பாா்ட்னா்ஷிப் 82 ரன்கள் சோ்த்தது. இதில் பட்டிதாா் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் இந்த முறையும் ரன்கள் சோ்க்காமல் எல்பிடபிள்யூ ஆனாா். 6-ஆவது பேட்டராக களம் புகுந்த தினேஷ் காா்த்திக் தனது வழக்கமான அதிரடியை தொடங்கினாா். பிளெஸ்ஸிஸுடனான அவரது 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 45 ரன்கள் கிடைத்தது.
பிளெஸ்ஸிஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து விளையாடியோரில் மஹிபால் லோம்ரோா் 0, சௌரவ் சௌஹான் 1 பவுண்டரியுடன் 9, விஜய்குமாா் வைஷாக் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
ஓவா்கள் முடிவில், தினேஷ் காா்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53, ஆகாஷ் தீப் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் ஜஸ்பிரீத் பும்ரா 5, ஜெரால்டு கோட்ஸீ, ஆகாஷ் மத்வல், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இன்றைய ஆட்டம்
லக்னௌ - டெல்லி
லக்னௌ
தொடர்புடையது
ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
டி20: கானர் அரைசதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றி!

அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்த இந்தியா : பென்னெட் அதிரடி வீண்; வீழ்ந்தது ஜிம்பாப்வே
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

