தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

டிராவில் முடிந்த தென்னாப்பிரிக்கா - மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட்!

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

News image
- படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :12 ஆகஸ்ட் 2024, 3:56 pm

DIN

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 357 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டோனி டி ஸார்ஸி அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் வாரிக்கேன் 4 விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்டத்தில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் முழுமையாக வீசப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீஸி கார்ட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 36 ரன்களும், கிரைக் பிரத்வெயிட், மிக்கி லூயிஸ் மற்றும் வாரிக்கேன் தலா 35 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் அய்டன் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. டோனி டி ஸார்ஸி 14 ரன்களுடனும், அய்டன் மார்க்ரம் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டோனி டி ஸார்ஸி அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களான கிரைக் பிரத்வெயிட் 0 ரன்களிலும், மிக்கி லூயிஸ் 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின், கீஸி கார்ட்டி மற்றும் அலிக் அதனாஸ் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கீஸி கார்ட்டி 31 ரன்களும், அலிக் அதனாஸ் 92 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் நிறைவடைய குறைந்த ஓவர்களே மீதமிருந்ததால் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.