
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் இயான் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் பெல்லை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயான் பெல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பொறுப்பேற்றுக் கொள்வார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடியும் வரை அவர் பேட்டிங் பயிற்சியாளராக அணியுடன் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயான் பெல் நியமிக்கப்பட்டது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் ஆஸ்லே டி சில்வா பேசியுள்ளார்.
இயான் பெல் குறித்து ஆஸ்லே டி சில்வா கூறியதாவது: இங்கிலாந்தில் உள்ள மைதானங்களின் தன்மை குறித்து இயான் பெல்லுக்கு நன்றாகத் தெரியும். இங்கிலாந்தில் அதிகம் விளையாடிய அனுபவம் உடையவர் இயான் பெல். அவரது யோசனைகள் இலங்கை அணிக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்றார்.
இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இயான் பெல் 7,727 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.