
பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பெண்கள் பிரிவில் இந்திய அணியை காலிறுதி வரைக்கு கொண்டு சென்ற வீராங்கனை அர்ச்சனா காமத், வெளிநாடு சென்று படிப்பில் கவனம் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில், இந்தியாவின் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி வரலாறு படைத்தது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வரலாற்றில், காலிறுதிக்கு முன்னேறியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருந்தது; இருப்பினும், பதக்கம் தவறியதை டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் விரும்பவில்லை.
பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பெண்கள் பிரிவின் காலிறுதிப் போட்டியில், ஜெர்மனியிடம் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், 2028 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் விளையாட்டுகளில், பதக்கத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லாததால், டேபிள் டென்னிஸை தொழில்ரீதியாக விட்டுவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாட்டில் படிக்க, அர்ச்சனா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, அர்ச்சனாவின் பயிற்சியாளர் அன்ஷுல் கார்க் கூறியதாவது, ``15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் டேபிள் டென்னிஸ் விளையாடிய அர்ச்சனா, ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உச்சக்கட்டத்தை அடைந்தார்.
விளையாட்டில் அர்ச்சனா அதிக கவனம் செலுத்தினார்; கடந்த இரண்டு மாதங்களில் அவர் மிகவும் பாடுபட்டார்.
இருந்தபோதிலும், விளையாட்டுக்காகவும் நாட்டிற்காகவும் தனது சிறந்த பங்களிப்பை வழங்கிய பின்னர், எந்த வருத்தமும் இல்லாமல், அவர் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளார்.
வெளிநாட்டில் படிப்பதுதான், ஒரு சிறந்த தொழில் பாதையாக, அவருக்கு தெரிந்திருக்கிறது. வெளிநாடு செல்வதற்காக அவர் முடிவு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன்.
அவர் மனம் மாறிவிட்டால், அதை மாற்றுவது கடினம்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.