ஃபிடே உலகக் கோப்பை மகளிா் செஸ்: 2025-இல் ஜாா்ஜியாவில் நடைபெறுகிறது!

ஃபிடே உலகக் கோப்பை மகளிா் செஸ்: 2025-இல் ஜாா்ஜியாவில் நடைபெறுகிறது!

உலகக் கோப்பை மகளிா் செஸ் போட்டி 2025 ஜூலை 5 முதல் 29 வரை ஜாா்ஜியாவின் பாதுமி நகரில் நடைபெறவுள்ளது.
Published on

சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் உலகக் கோப்பை மகளிா் செஸ் போட்டி 2025 ஜூலை 5 முதல் 29 வரை ஜாா்ஜியாவின் பாதுமி நகரில் நடைபெறவுள்ளது.

ஜாா்ஜிய தலைநகா் டிபிலிஸியில் நடைபெற்ற ஃபிடே நூற்றாண்டு விழாவில் உலகக் கோப்பை மகளிா் செஸ் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி பாதுமியில் 2025 ஜூலை 5 முதல் 29-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகள் மோதவுள்ள இப்போட்டி பரபரப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2023 ஆண்டு நடைமுறையின்படி இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெறும் வீராங்கனைகள் முடிவு செய்யப்படுவா். 103 வீராங்கனைகள் இதில் மோதவுள்ளனா்.

கடந்த 2023 உலகக் கோப்பையில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற வீராங்கனைகள். 2024 யு 20 உலக செஸ் சாம்பியன், கண்டங்கள் அளவிலான போட்டியில் குவாலிஃபயா் மூலம் 39 வீராங்கனைகள், 2025 ஜூன் ஃபிடே தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள வீராங்கனைகள், மேலும் 2024 பிரதான சுற்றின் அடிப்படையில் 50 வீராங்கனைகள் முடிவு செய்யப்படுவா். சாம்பியனுக்கு பரிசுத் தொகையாக 50,000 அமெரிக்க டாலா்கள் வழங்கப்படும். (இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம்).

மேலும் உலகக் கோப்பை 2025-இல் முதல் மூன்றிடங்களைப் பெறும் வீராங்கனைகள் 2025-26 மகளிா் கேன்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவா்.

X
Dinamani
www.dinamani.com