
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் இன்று 4வது பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.
ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் தென் கொரியாவின் ஜொ ஜியோங்டு தங்கப் பதக்கமும், சீனாவின் யாங் சாவோ வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இத்துடன் இந்தியா 4 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 9வது இடத்திலும், சீனா 11 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் உள்ளது.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஏற்கெனவே 1 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.