கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜிம்பாப்வே 108 ரன்களுக்கு ஆட்டமிழப்பு! பாக். அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20; பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

News image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளம்

Updated On :1 டிசம்பர் 2024, 5:37 pm

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது.

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி குயின்ஸ்லாந்து ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 15.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது.

பாகிஸ்தான் அணியில் சூஃபியன் முகீம், அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகளையும், ஜஹாண்டட் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.