உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 55 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 52.77 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தரவரிசைப் பட்டியலில் முதல் பாதி தரவரிசையில் உள்ள அணிகள் தங்களுக்குள் கடும் போட்டியாளராக விளங்குகின்றன. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணிகளுக்கு இடையேயான புள்ளிகள் சதவிகித வித்தியாசம் வெறும் 5 சதவிகிதமாக இருப்பதே ஆகும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5-வது இடத்துக்கு சறுக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.