முதலிடம் பிடித்த நியூசிலாந்து: 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா! 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூஸிலாந்து.
முதலிடம் பிடித்த நியூசிலாந்து: 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா! 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் மவுண்ட் மௌன்குனை பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 144 ஓவா்களில் 511 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 (3 சிக்ஸா், 26 பவுண்டரி), கேன் வில்லியம்ஸன் 118 (16 பவுண்டரிகள்) ரன்களைக் குவித்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் நீல் பிராண்ட் 6-119 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பின்னா் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 72.5 ஓவா்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கீகன பீட்டா்ஸன் 45 ரன்களை எடுத்தாா். நியூஸி தரப்பில் மேட் ஹென்றி 3-31, சான்ட்நா் 3-34 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 43 ஓவா்களில் 179/4 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. கேன் வில்லியம்ஸன் 109 (12 பவுண்டரி, 1 சிக்ஸா்) விளாசினாா். இது கேன் வில்லியம்ஸனின் 31-ஆவது டெஸ்ட் சதமாகும்.

முதல் இன்னிங்ஸில் 349 ரன்கள் முன்னிலையுடன், ஒட்டுமொத்தமாக நியூஸிலாந்து அணி 528 ரன்கள் முன்னிலை பெற்றது. 529 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. தொடக்க பேட்டா்கள் துரிதமாக நடையைக் கட்டிய நிலையில், ஜுபோ் ஹம்ஸா 36, ரேனாா்ட் வேன் 31 இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 63 ரன்களைச் சோ்த்தனா்.

இருவரையும் கைல் ஜேமிஸன் வெளியேற்றிய நிலையில், வலது கை பேட்டா் டேவிட் பெடிங்ஹாம் மலைபோல் நின்று ஆடினாா். எனினும் அவா் ஜேமிஸன் பந்தில் 3 சிக்ஸா் 13 பவுண்டரியுடன் 87 ரன்களை விளாசி அவுட்டானாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற

80 ஓவா்களில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா. நியூஸி தரப்பில் ஜேமிஸன் 4-48, சான்ட்நா் 3-59 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதன் மூலம் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 281 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது நியூஸி.

மேலும் நியூஸி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 2-ஆம் இடத்துக்கும் இந்தியா 3ஆம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com