100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16-வது இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 16 வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16-வது இங்கிலாந்து வீரர்!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரராக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று (பிப்ரவரி 15) தொடங்கியது. இந்தப் போட்டி இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 16 வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 76-வது வீரராக அவர் மாறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 6,251 ரன்கள் (இந்தப் போட்டியை சேர்க்காமல்) குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com