டி20 தொடர்: ஆஸி.க்கு எதிரான நியூசிலாந்து அணியில் மாற்றம்!

காயம் காரணமாக மாட் ஹென்றி மற்றும் டிம் செய்ஃபர்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகல்.
டி20 தொடர்: ஆஸி.க்கு எதிரான நியூசிலாந்து அணியில் மாற்றம்!

காயம் காரணமாக மாட் ஹென்றி மற்றும் டிம் செய்ஃபர்ட் அணியிலிருந்து விலகியுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டி20 தொடர்: ஆஸி.க்கு எதிரான நியூசிலாந்து அணியில் மாற்றம்!
பேஷ்பால் யுக்தியை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்!

காயம் காரணமாக மாட் ஹென்றி மற்றும் டிம் செய்ஃபர்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக அணியில் பென் சியர்ஸ் மற்றும் வில் யங் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரண்ட் போல்ட் (2 & 3-வது போட்டிக்கு), மார்க் சேப்மேன், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, லாகி பெர்க்யூசன், ஆடம் மில்னே, கிளன் பிளிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ்,ஈஷ் சோதி, டிம் சௌதி (முதல் போட்டிக்கு) மற்றும் வில் யங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com