
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தமிழ்நாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தமிழ்நாடு அணியில் இந்திரஜித் அதிகபட்சமாக 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் 231 ரன்களுக்கு ஆட்டமிழக்க தமிழக அணிக்கு 71 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
71 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி வெறும் 7 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பையில் காலிறுதிக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி சௌராஷ்டிரம் அல்லது விதர்பாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.