பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி; அட்டவணை வெளியீடு!

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 பிப்ரவரி 2024, 12:11 pm

DIN

இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான தொடர்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற மார்ச் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வங்கதேசம் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் உள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் முனைப்போடு இலங்கை உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடர்களுக்கான அட்டவணை விவரம்

டி20 தொடர்

முதல் டி20: மார்ச் 4, சில்ஹெட்

2-வது டி20: மார்ச் 6, சில்ஹெட்

3-வது டி20: மார்ச் 9, சில்ஹெட்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: மார்ச் 13, சட்டோகிராம்

2-வது ஒருநாள்: மார்ச் 15, சட்டோகிராம்

3-வது ஒருநாள்: மார்ச் 18, சட்டோகிராம்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: மார்ச் 22-26, சில்ஹெட்

2-வது டெஸ்ட்: மார்ச் 30 - ஏப்ரல் 3, சட்டோகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.