ஹார்திக் பாண்டியா அதிக அழுத்தத்தில் இருப்பார்: முன்னாள் இந்திய வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பார்
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அண்மையில் மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், மும்பை அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் எனவும் மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோப்புப்படம்
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் அறிமுக தொடரில் வழிநடத்தி கோப்பையை வென்ற விதம் சிறப்பாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியாவின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது வெற்றி கிடையாது. கோப்பையை வெல்ல வேண்டும். மும்பை அணி கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகிறது. அதனால் ஹார்திக் பாண்டியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com