பந்துவீச்சுக்கு திரும்புவது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ்!

இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன்பின் இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

பென் ஸ்டோக்ஸ்
பேஷ்பால் யுக்தியைத் தொடர்வோம்: பிரண்டன் மெக்கல்லம்

இந்திய அணியைக் கட்டுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபட வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்தன. அதற்கு ஏற்றவாறு பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான நாளை நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் நான் பந்துவீசலாம் அல்லது பந்துவீசாமலும் இருக்கலாம். இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது இங்கிலாந்துக்கு சிறந்த தெரிவாக இருக்கும் என்றார்.

பென் ஸ்டோக்ஸ்
பேஷ்பால் யுக்தியை கைவிடுங்கள் ஜோ ரூட்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் அறிவுரை!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டியின்போது பென் ஸ்டோக்ஸ் கடைசியாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com