தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூர்

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூா்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 6:46 pm

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ûஸ செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் குஜராத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சேர்க்க, பெங்களூர் 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்து வென்றது. அணியின் வெற்றிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சபினேனி மேக்னா முக்கியப் பங்களித்தனர்.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் பேட்டிங்கில் தொடக்க வீராங்கனை ஹர்லீன் தியோல் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்க்க, கேப்டன் பெத் மூனி 8, போப் லிட்ச்ஃபீல்டு 5, வேதா கிருஷ்ணமூர்த்தி 9, ஆஷ்லே கார்டனர் 7, கேத்தரின் பிரைஸ் 3, ஸ்நேஹா ராணா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஓவர்கள் முடிவில் குஜராத் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்தது. தயாளன் ஹேமலதா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31, தனுஜா கன்வர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பெüலிங்கில் சோஃபி மோலினுக்ஸ் 3, ரேணுகா சிங் 2, ஜார்ஜியா வேர்ஹாம் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 108 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பெங்களூர் பேட்டர்களில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 43, சோஃபி டிவைன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். சபினேனி மேக்னா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 36, எலிஸ் பெரி 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

குஜராத் பெüலிங்கில் ஆஷ்லே கார்டனர், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.