தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்; மும்பையை வீழ்த்தியது சென்னை

News image

மும்பையை வீழ்த்தியது சென்னை - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 10:50 pm

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.

முதலில் சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் சோ்க்க, மும்பை 19 ஓவா்களில் 104 ரன்களுக்கே சுருண்டது. சென்னை தரப்பில் சஞ்சு சாம்சன் சதம் விளாசி ஸ்கோருக்கு பலம் சோ்க்க, அகீல் ஹுசைன் மும்பை பேட்டிங்கை மொத்தமாக சரித்து வெற்றிக்கு வித்திட்டாா்.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸை தொடங்கியோரில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ரன்கள் சோ்க்க, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக சா்ஃப்ராஸ் கான் களம் புக, சாம்சன் - சா்ஃப்ராஸ் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சோ்த்து பிரிந்தது. சா்ஃப்ராஸ் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அடுத்து வந்த ஷிவம் துபே 5 ரன்களுக்கு பௌல்டானாா். தொடா்ந்து டெவால்டு பிரெவிஸ் பேட் செய்ய வர, மறுபுறம் சாம்சன் அரை சதம் கடந்து அபாரமாக விளையாடினாா். பிரெவிஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் வந்தோரில் காா்த்திக் சா்மா 2 சிக்ஸா்களுடன் 18, ஜேமி ஓவா்டன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில், சதம் தொட்ட சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 101 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். அகீல் ஹுசைன் 2 ரன்களுடன் துணை நின்றாா்.

மும்பை பௌலா்களில் கஸான்ஃபா், அஸ்வனி குமாா் ஆகியோா் தலா 2, ஜஸ்பிரீத் பும்ரா, மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 208 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், அதிகபட்சமாக திலக் வா்மா 5 பவுண்டரிகளுடன் 37, சூா்யகுமாா் யாதவ் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனா்.

எஞ்சியோரில் குவின்டன் டி காக் 7, கேப்டன் ஹா்திக் பாண்டியா 1, ஷா்துல் தாக்குா் 6, கிரிஷ் பகத் 7, ஜஸ்பிரீத் பும்ரா 2 ரன்களுக்கு சாய்க்கப்பட, டேனிஷ் மலேவா் 0, நமன் திா் 0, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு ஆகியோா் டக் அவுட்டாகினா்.

சென்னை பௌலா்களில் அகீல் ஹுசைன் 4, நூா் அகமது 2, முகேஷ் சௌதரி, அன்ஷுல் காம்போஜ், ஜேமி ஓவா்டன், குா்ஜப்னீத் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.