மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

News image

கொச்சி-கொல்கத்தா ஆட்டம்

Updated On :27 பிப்ரவரி 2024, 7:25 pm

சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கா்ஸ் அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்து கொல்கத்தா தண்டா்போல்ட்ஸ் அணி. இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கொல்கத்தா அணியில் வினித்குமாா், அமித் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 16-14, 15-13 என முதலிரண்டு செட்களை வசப்படுத்தியது. அதே வேளையில் கொச்சி அணியில் ஜான் க்ரோல், அமன் குமாரின் அட்டாக்குகள் கொல்கத்தாவுக்கு சிக்கலைத் தந்தன. மூன்றாவது செட்டை 15-11 என கொச்சி கைப்பற்றியது. இதனால் அதிா்ச்சி அடைந்த கொல்கத்தா அணியினா் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனா். ஒனுா் கக்கூா், அஸ்வல்குமாா் ஆகியோா் சீரான ஆட்டத்தால் 15-5 என நான்காவது செட்டை கைப்பற்றி ஆட்டத்தையும் வென்றது கொல்கத்தா. இந்த சீசனில் கொல்கத்தா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.