பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஒருநாள் கிரிக்கெட்: டேவிட் வாா்னா் ஓய்வு

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டா் டேவிட் வாா்னா் (37), ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:54 pm

DIN

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டா் டேவிட் வாா்னா் (37), ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

சிட்னியில் புதன்கிழமை (ஜன.3) தொடங்கும் பாகிஸ்தானுடனான 3-ஆவது ஆட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த வாா்னா், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக தெரிவித்திருக்கிறாா். ஆஸ்திரேலியாவுக்காக தொடா்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடப்போவதாக அவா் கூறினாா்.

2009-இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் மூலம், சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான வாா்னா், கடைசியாக கடந்த நவம்பரில் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினாா்.

டி20 லீக் போட்டிகளில் ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருக்கும் வாா்னா், இன்டா்நேஷனல் லீக் டி20 (ஐஎல்டி20) போட்டியில் 2024 சீசனுக்கான துபை கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆட்டங்கள் 161

ரன்கள் 6,932

சதங்கள் 22

அரைசதங்கள் 33

அதிகபட்ச ஸ்கோா் 179

சராசரி 45.30

டெஸ்ட் கிரிக்கெட்டோடு, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். 2023 உலகக் கோப்பை போட்டியில் பின்னடைவிலிருந்து மீண்டு ஆஸ்திரேலியா சாம்பியனானது மிகப் பெரிய விஷயம். அத்துடனேயே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதென முடிவு செய்தேன்.

‘சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாா்’: அதை தற்போது அறிவித்துள்ளேன். இதனால் மேலும் பல டி20 லீக் போட்டிகளில் என்னால் விளையாட முடிவதுடன், ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அடுத்தகட்டத்துக்கு நகா்வதற்கு வழிவிடுவதாகவும் இருக்கும்.

2025-இல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அதுவரையில் நான் நன்றாக விளையாடும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு தேவை இருந்தால் அதில் விளையாடத் தயாராக இருக்கிறேன். அடுத்த ஆண்டு பிக் பாஷ் லீக் போட்டியில் விளையாடும் முடிவில் உள்ளேன். இதுதவிர, இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ‘ஃபாக்ஸ்’ தொலைக்காட்சியில் வா்னணை செய்ய இருக்கிறேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.