ஸ்டீவ் ஸ்மித்தின் டென்னிஸ் திறமைக்கு தலைவணங்கிய ஜோகோவிச்: வைரல் விடியோ! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடியதை ரசித்த ஜோவிச்சின் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   
படங்கள்: எக்ஸ் | ஆஸ்திரேலிய ஓபன்
படங்கள்: எக்ஸ் | ஆஸ்திரேலிய ஓபன்

2010இல் டெஸ்டில் சுழல் பந்து வீச்சாளராக அறிமுகமானவர் ஸ்டீவ் ஸ்மித். பின்னர் தனது அபாரமான பேட்டிங் திறமையினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார். 

105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 9,514 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 இரட்டை சதங்கள், 32 சதங்கள், 40 அரைசதங்கள் அடங்கும். சராசரி 58.01 என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. விரைவில் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை தொட இருக்கிறார். 

நாளை தொடங்கி ஜன.28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. இதற்காக நட்பு ரீதியாக டென்னிஸ் உலகில் நட்சத்திர வீரராக இருக்கும் ஜோகோவிச் உடன் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டியில் ஸ்மித் டென்னிஸ் ஆடினார்.

இதில் ஜோகோவிச்சின் சர்வீஸை எதிர்கொண்ட ஸ்மித் திறமையாக அடித்து ஆடுவார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆச்சரியமடைந்த ஜோகோவிச் தலைவணங்கி பாராட்டுவார். 

அதேபோல ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவரால் பந்தினை அடிக்க முடியவில்லை. இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் கிரிகெட், டென்னிஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com