சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 10 வீரர்களில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 10 வீரர்களில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.  இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (ஜனவரி 12) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 

சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களில் ஒருவர் கூட இந்திய அணியிலிருந்து இடம்பெறவில்லை. 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்

1. டிம் சௌதி (நியூசிலாந்து) - 151 விக்கெட்டுகள்
2. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 140 விக்கெட்டுகள்
3. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 130 விக்கெட்டுகள்
4. ஈஷ் சோதி (நியூசிலாந்து) - 127 விக்கெட்டுகள்
5. லசித் மலிங்கா (இலங்கை) - 107 விக்கெட்டுகள்
6. அடில் ரஷீத் (இங்கிலாந்து) - 107 விக்கெட்டுகள்
7. முஸ்தபிசூர் ரஹ்மான் (வங்கதேசம்) - 105 விக்கெட்டுகள்
8. மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து) - 105 விக்கெட்டுகள்
9. ஷதாப் கான் (பாகிஸ்தான்) - 104 விக்கெட்டுகள்
10. மார்க் அடாய்ர் (அயர்லாந்து) - 102 விக்கெட்டுகள்

இந்திய சார்பில் சர்வதேச டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com