2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிப்பு; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

2023 ஆம் ஆண்டின் ஐசிசி  ஒருநாள் அணியை ஐசிசி இன்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது. 
2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிப்பு; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

2023 ஆம் ஆண்டின் ஐசிசி  ஒருநாள் அணியை ஐசிசி இன்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணிக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து மேலும் 5 இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். ஷுப்மன்  கில், விராட் கோலி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

2023 ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் க்ளாசன், மார்கோ ஜேன்சன், ஆடம் ஸாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி. 

கடந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய 8  வீரர்கள் 2023 ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com