இந்திய அணி நன்றாக விளையாடியிருக்கலாம்: அனில் கும்ப்ளே

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப்படியான நேர்மறை எண்ணங்களுடன் விளையாடியிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நன்றாக விளையாடியிருக்கலாம்: அனில் கும்ப்ளே

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப்படியான நேர்மறை எண்ணங்களுடன் விளையாடியிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. 

இந்த நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப்படியான நேர்மறை எண்ணங்களுடன் விளையாடியிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு நாள்களாக இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் செயல்பாடுகள் சாதரணமானதாகவே இருந்தது. ஃபீல்டிங்கின்போது இந்திய வீரர்கள் தங்களது தலையை கீழே தொங்கவிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்திருக்கலாம். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கண்டிப்பாக இன்னும் கொஞ்சம் நேர்மறையாக விளையாடியிருக்கலாம். ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததும், ஜடேஜா ரன் அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் பேட்டிங் செய்தது, ஃபீல்டிங்கில் செயல்பட்ட விதம் அனைத்தும் சிறப்பாக இருந்தது. அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com