உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

உடல்நலக் குறைவு காரணமாக இந்திய அணியின் மயங்க் அகர்வால் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

உடல்நலக் குறைவு காரணமாக இந்திய அணியின் மயங்க் அகர்வால் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியின் மயங்க் அகர்வால் கர்நாடக அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். கிரிக்கெட் போட்டிக்காக புதுதில்லி செல்லும் விமானத்தில் புறப்பட தயாராக இருந்தபோது மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் விமானத்திலேயே இரண்டு முறை வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியிருப்பதாவது: மயங்க் அகர்வால் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com