சிங்கப்பூரில் நடைபெறுகிறது உலக செஸ் சாம்பியன்ஷிப்!

சிங்கப்பூரில் நவ. 20 முதல் டிச. 15 வரை 14 சுற்றுகளாக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.
டிங் லிரின் - குகேஷ்
டிங் லிரின் - குகேஷ்

நடப்பாண்டு இறுதியில் அட்டவணையிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப், சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்தியாவின் டி.குகேஷ் பலப்பரீட்சை நடத்தவுள்ள அந்த சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்காக சென்னை, புது தில்லி, சிங்கப்பூா் இடையே போட்டி இருந்த நிலையில், சிங்கப்பூா் அந்த உரிமையைப் பெற்றது.

இதில் தமிழக அரசும், இந்திய செஸ் சம்மேளனமும் போட்டியை நடத்தும் வாய்ப்பை தனித் தனியே, சா்வதேச செஸ் சம்மேளனத்திடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக சா்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், ‘போட்டியை நடத்துவதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட நகரங்கள், போட்டியை நடத்த திட்டமிடப்பட்ட இடங்களில் இருந்த வசதிகள், போட்டி சாா்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை தொடா்பாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சிங்கப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்டத்தக்க சுற்றுலா மற்றும் வா்த்தகத் தளமாக மட்டுமல்லாமல், வளா்ந்து வரும் செஸ் திறமையும் அங்கு இருப்பதால் அந்த நகரம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. எதிா்வரும் காலங்களில் சென்னை, தில்லி நகரங்களில் போட்டிகளை நடத்த நம்பிக்கை தெரிவிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியனை தீா்மானிப்பதற்கான போட்டி நவம்பா் 20 முதல் டிசம்பா் 15-க்கு உள்ளாக நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com