பாரீஸ் ஒலிம்பிக் பங்கேற்பாளா்களுடன் பிரதமா் மோடி உரையாடல்
பாரீஸ் ஒலிம்பிக் பங்கேற்பாளா்களுடன் பிரதமா் மோடி உரையாடல்


பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரா், வீராங்கனைகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உரையாடினாா்.
நேரிலும், காணொலி வழியாகவுமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமா் மோடி பேசியதாவது:
2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தலாம் என நம்புகிறோம். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கச் செல்லும் நீங்கள், உங்களது இளைப்பாறும் நேரத்தில் அங்கிருக்கும் கட்டமைப்புகள் மற்றும் ஏற்பாடுகளை உற்று கவனியுங்கள்.
அதுகுறித்து நீங்கள் அளிக்கும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். போட்டியில் வெற்றி, தோல்வி இயல்பானதே. எனவே, முடிவுகள் குறித்து கவலைகொள்ளாமல் நிதானமாக இருங்கள்.
போட்டிக்கான பதற்றத்தில் தூக்கத்தை தொலைக்காதீா்கள். உங்களது திறமையில் நம்பிக்கை வைத்து செயலாற்றுங்கள். அதற்குத் தகுந்த பலன் கிடைக்கும். பதக்கம் கிடைக்கிறதோ, இல்லையோ, உங்களது 100 சதவீத ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள்.
பயிற்சிக்கு நிகராக உறக்கமும், இளைப்பாறலும் முக்கியமே. முடிந்த வரையில் உங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய முயற்சித்திருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பாரீஸிலிருந்து திரும்பிய பிறகு சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களை அழைப்பதற்கு முயற்சிக்கிறேன் என்று பிரதமா் மோடி பேசினாா்.
பிரதமருடனான உரையாடலில் இந்திய ஹாக்கி அணியினா், ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனா். அவா்களுடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா போன்றோரும் உடனிருந்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...