தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சதம் விளாசிய அபிஷேக் சர்மா; ஜிம்பாப்வேவுக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்துள்ளது.

News image
அபிஷேக் சர்மா - படம் | பிடிஐ
Updated On :7 ஜூலை 2024, 1:00 pm

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தனர். அறிமுகப் போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா இன்றையப் போட்டியில் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட, ருதுராஜ் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், ருதுராஜுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். அரைசதம் எடுக்கும் வரை நிதானம் காட்டிய ருதுராஜ், அதன்பின் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்கள் (11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்கள் (2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.