
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (ஜூலை 7) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.
இன்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக சில சாதனைகளை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். அவை பின்வருமாறு:
குறைந்த இன்னிங்ஸ்களில் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் விளாசிய இந்திய வீரர்கள்
அபிஷேக் சர்மா - 2 இன்னிங்ஸ்கள்
தீபக் ஹூடா - 3 இன்னிங்ஸ்கள்
கே.எல்.ராகுல் - 4 இன்னிங்ஸ்கள்
சர்வதேச டி20 போட்டிகளில் இளம் வயதில் சதம் விளாசிய இந்திய வீரர்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 21 வயது 279 நாள்கள் - நேபாளத்துக்கு எதிராக, 2023
ஷுப்மன் கில் - 23 வயது 146 நாள்கள் - நியூசிலாந்துக்கு எதிராக, 2023
சுரேஷ் ரெய்னா - 23 வயது 156 நாள்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2010
அபிஷேக் சர்மா - 23 வயது 307 நாள்கள்- ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2024
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர்கள்
ரோஹித் சர்மா - 35 பந்துகளில் - இலங்கைக்கு எதிராக, 2017
சூர்யகுமார் யாதவ் - 45 பந்துகளில் - இலங்கைக்கு எதிராக, 2023
கே.எல்.ராகுல் - 46 பந்துகளில் - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2016
அபிஷேக் சர்மா - 46 பந்துகளில் - ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2024
முதல் இந்திய வீரர்
சர்வதேச டி20 போட்டிகளில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் அபிஷேக் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.