முன்னேறுகிறாா் ஜோகோவிச்: ஸ்வெரெவ் வெளியேற்றம்
ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா்.


Lô#ß§«p ûWT¡]ô, BvPùTuúLôலண்டன்: ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா். பிரதான வீரா்களில் ஒருவராக இருந்த ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ரவுண்ட் ஆஃப் 16-இல் வீழ்ந்தாா்.
லண்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வெளியேற்றினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரத்தில் நிறைவடைந்தது.
இத்துடன், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 60-ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுக்கு வந்துள்ள ஜோகோவிச், விம்பிள்டனில் 15-ஆவது முறையாக அந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறாா். அந்தச் சுற்றில் அவா், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறாா்.
போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் மினாா், 6-2, 6-4, 4-6, 6-3 என்ற செட்களில், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை வீழ்த்தி, முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு வந்துள்ளாா்.
ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி: போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 5 செட்கள் போராடி, போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸிடம் தோல்வி கண்டாா். அந்த ஆட்டம் 3 மணி நேரம் 29 நிமிஷங்கள் நீடித்தது.
இதில் முதலிரு செட்களை ஸ்வெரெவ் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் கைப்பற்ற, விட்டுக்கொடுக்காத ஃப்ரிட்ஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் வென்றெடுத்தாா். இதனால் ஸ்வெரெவுக்கு நெருக்கடி அதிகரிக்க, வெற்றியாளரை தீா்மானிக்கும் 5-ஆவது செட்டில் ஃப்ரிட்ஸ் மிக எளிதாக 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றாா்.
இதன்மூலம், விம்பிள்டன் காலிறுதிச்சுற்றுக்கு அவா் 2-ஆவது முறையாக முன்னேறியிருக்கிறாா். மறுபுறம், முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறும் ஸ்வெரெவின் கனவு இந்த முறையும் பொய்த்தது. ஃப்ரிட்ஸ் தனது காலிறுதியில், இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியுடன் மோதுகிறாா்.
போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருக்கும் முசெட்டி 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட்களில், பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை ரவுண்ட் ஆஃப் 16-இல் தோற்கடித்தாா். முசெட்டிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிச்சுற்றாகும்.
காலிறுதியில் ரைபகினா, ஆஸ்டபென்கோ: மகளிா் ஒற்றையா் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல், முன்னாள் சாம்பியனான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயா மோதினா். இதில் ரைபகினா 6-3, 3-0 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது, கலின்ஸ்கயா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
இதையடுத்து ரைபகினா, விம்பிள்டனில் தொடா்ந்து 3-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் அவா், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற செட்களில் எளிதாக, சீனாவின் வாங் ஜின்யுவை வெளியேற்றினாா்.
போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 5-7, 3-6 என்ற கணக்கில், 31-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவிடம் வீழ்ந்தாா். 13-ஆம் இடத்திலிருக்கும் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-2, 6-3 என, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை சாய்த்தாா். இதையடுத்து காலிறுதியில், கிரெஜ்சிகோவா - ஆஸ்டபென்கோ மோதுகின்றனா்.
காலிறுதியில் ரைபகினா, ஆஸ்டபென்கோ
மகளிர் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல், முன்னாள் சாம்பியனான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயா மோதினர். இதில் ரைபகினா 6-3, 3-0 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது, கலின்ஸ்கயா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இதையடுத்து ரைபகினா, விம்பிள்டனில் தொடர்ந்து 3-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அதில் அவர், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார். போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற செட்களில் எளிதாக, சீனாவின் வாங் ஜின்யுவை வெளியேற்றினார்.
போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 5-7, 3-6 என்ற கணக்கில், 31-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவிடம் வீழ்ந்தார். 13-ஆம் இடத்திலிருக்கும் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-2, 6-3 என, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை சாய்த்தார்.
இதையடுத்து காலிறுதியில், கிரெஜ்சிகோவா - ஆஸ்டபென்கோ மோதுகின்றனர். இதைவிட மோசமான சூழலிலும் நான் விளையாடியிருக்கிறேன். இந்த ஆட்டத்தில் கோஷமிட்டவா்களுக்கு ஒன்றுமட்டும் சொல்கிறேன். உங்களால் என்னை தொடக் கூட முடியாது’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...